Powered  by SMTC

​​​​ தமிழ் கத்தோலிக்க இறைச்சமூகம் , துபாய்  

​​​​​St. Mary's Catholic Tamil Community, Dubai

Golden Jubilee Year

@2016.  St.Mary's Tamil Community, Dubai.   

Quick Links

​​Friday, November 3, 2017
Holy Hour of Adoration
Friday, 3rd November: First Friday of the month: Holy Hour of Adoration after the 4:45pm mass.


Friday, November 10, 2017
Baptism Seminar for the month of November
Friday, 10th November: Baptism seminar will be held at the mini hall from 8:30 am to 10:00 am. Parents and Godparents must attend this seminar. Please register online.


Monday, November 13, 2017
Wedding Anniversary Mass
Monday, 13th November: Wedding Anniversary Mass at 7.00 pm. Couples are requested to make advance registration online.


Sunday, December 31, 2017
World Meeting of Families (WMOF) 2018 - The 9th World Meeting of Families will take place in Ireland from 21st to 26th August, 2018. This is the first time our vicariate will be participating and all parishioners are invited to attend. For more details & registration click the above link.

Last update :  

+ 26 Oct  - Holy Adoration  @ 7:45pm

+ 27 Oct  - Holy Mass in Tamil  @ 7:45pm​

ON AIR

Saint of the day

St. Marys Catholic Church Feeds..​

​​​Welcome to our ​Tamil Community Site


இணையத்தின் வாயிலாக இறைப்பணி தொடர இதயத்தில் அன்பை ஏந்தி இணைந்திருக்கும் என் அன்பு மக்களே

ஆன்மீக பயணத்தில் அக்கறையும் தாகமும்  கொண்ட நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

இறைப்பற்று உங்கள் ஒவ்வொருவரையும் பிறர் அன்பிலும், குடும்ப நட்புறவிலும் மேலும் உங்களை வளர்க்க செபிக்கிறேன். ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில், சில வேலைகளில், நாம் நம்மையே இழக்க நேரிடும். இறைவனில் வருகின்ற தருணம் தான் நம்மையே நாம் கண்டுணரச் செய்திடும்.

இறைவாக்கினர் அன்று இறைவார்த்தையை ஏந்தி வந்தார்கள். இன்று இணையமே இறைவனை சுமந்து நமது உள்ளங்கைகளில் தவழ வருகிறது. இவ்வழி ஊடக வசதிகளை உள நல ஆன்மீக வளர்ச்சிக்கு பயன்படுத்துவது, பாறையை செதுக்கி அழகிய சிலை வடிப்பதர்க்கு ஒப்பாகும்.

உளிகள் உடைக்க அல்ல உருவாக்கப் பயன்படும் சாதனம். எல்லா சமூக தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தும் விதத்திலே வளர்ச்சி தரும். இவ்வழியே இறைவனைக் கண்டு இறைவழி வாழ உங்களை அழைக்கிறேன்.

வாருங்கள் நாம் ஒன்றாய் இறைக்குடும்பமாய் அன்பு செய்வோம். இறைவனில் இறைச்சமூகமாய் வாழ்வோம்.

Prayer Request

       இறை இரக்கத்தின் ஜெபமாலை +

1. தொடக்க ஜெபம்:
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்

இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.

இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

இயேசு கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.>எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

விசுவாச அறிக்கை:

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

2. பெரிய மணியில்:

நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவரும் உமது நேச மகனுமான இயேசுக்கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும் அகில உலகின் பாவங்களுக்காகவம், பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

3. சிறிய மணிகளில்(10):

இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக... எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும் பிதாவே
( 10 முறை) (2, 3ஆம் படிகளை 5முறை சொல்லவும் (5தேவ இரகசியங்களை தியானிப்பதுபோல்))
4. முடிவில்:

புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்

புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்

புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே! எங்கள் மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும்

இறுதிச்செபம்

மகா தயை நிறைந்த இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத் துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருள் கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து இவற்றை எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
்<\body>
Verse of the Day : “Glorify the LORD with me; let us exalt his name together.” - Psalm 34:3


Rev. Fr. Arul Edward OFM cap

Spiritual Director
Tamil Community

St. Mary's Catholic Church I Dubai

Mass Schedule

Join our community!

Anbiyam